Friday, September 18, 2015

நினைத்தது நிறைவேற சிவனுக்கு மாவிளக்கு!

அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது போல, நினைத்தது நிறைவேற சிவனுக்கும் மாவிளக்கு ஏற்றலாம். இதற்காக சனி பிரதோஷம் அல்லது மாத சி வராத்திரி நாளில் வீட்டில் விளக்கேற்றி, நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என துவங்கும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை படிக்க வேண்டும்.  மாலையில் கோவிலுக்குச் சென்று நந்தீஸ்வரர், சுவாமியை மூன்று முறைவலம் வந்து வழிபட வேண்டும். பின், பச்சரிசி மாவு அகல் செய்து, அதில்  நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்

புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும்  மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு,  சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. 

பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.   ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

புரட்டாசி சனியன்று ஓம்

புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற  எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது  அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

Tuesday, September 15, 2015

கஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க!



* நாம் பலவீனர்கள் ஆவோம்.
* நம் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நமது பலத்தை இழப்பதுடன், அவர்களது அடக்குமுறைக்கும் ஆளாவோம்.
* நமக்கு கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பிறர் மகிழ்வதை விட பொறாமையே கொள்வர். அவர்களின் பார்வை நம் வாழ்வில்  பின்னடைவை ஏற்படுத்தும்.
* பிறரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தால், நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும் என்பது சரியான கருத்தாக முடியாது. கணவன் மனைவியிடமும்,  மனைவி கணவனிடமும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம். 
* திருமணத்துக்கு முன்பு தாயிடம் கருத்து பரிமாற்றம் செய்யலாம்.
* இதையெல்லாம் விட நமது சோதனைகள், வேதனைகள், இன்பங்கள்,நாம் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து  சொல்லுங்கள். உங்களுக்கு மனஅமைதி உறுதியாகக் கிடைக்கும்.
* மனஅமைதி இல்லாத போது, நல்ல நுõல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நுõல்களைப் படியுங்கள். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று,  நல்லுரைகளைக் கேளுங்கள். மனம் ஆனந்தமடையும்.

விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?

விநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள்  தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.அகத்தியர்  கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து  நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காககாவிரி நதியை  உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு  தலையில் குட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட  வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். அசுரன் முன் போட்டதோப்புகரணத்தை விநாயகர் முன்பக்தியுடன் தேவர்கள் ÷ பாட்டனர்.அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது. அறிவியல் ரீதியாக தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில்குட்டிக்  கொள்வதாலும் நம் உடலில் உள்ள  சுஷûம்னா என்ற நாடிதட்டி எழுப்பப்படுகிறது. அதிலிருக்கும் அமிர்த கலசம் மேலே எழும்பி அமிர்தம்  முழுவதும் உடலில் பரவுகிறது.இதனால் மன எழுச்சியும்,சுறுசுறுப்பும் உண்டாகிறது.